காமராஜ் காட்சியகம்

(காமராஜ் விழிப்புணர்வு மையம்)

காமராஜர்

தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே (நமக்காகவே) வாழ்ந்தவர் காமராஜர். பொது நலனே தன்னலனாக நினைத்தவர். அவருiடைய வாழ்க்கை வரலாற்றை அறிவதன் மூலம் இன்றைய தலைமுறை, தன்னை மேம்படுத்திக் கொள்ள இயலும். அவருடைய சிந்தனைத் தெளிவையும், செயல் வேகத்தையும் பிரமிப்போடு பார்ப்பதோடு நின்று விடாமல், அவரின் அடிச்சுவடுகளை பின்பற்ற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். பெருமை மிகு பெருந்தலைவரின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய வரலாற்றை எளிமைப்படுத்தி இங்கு தந்துள்ளோம். மேலும் அவரது வாழ்க்கைச் சுவடுகள் அட்டவணையாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் களவீரராக கர்மவீரரின் செயல்பாடுகள், மக்களின் நலனை மட்டும் தன் உயிர்மூச்சாகக் கொண்ட பெருந்தலைவரின் ஆட்சி சிறப்புகள் ஆகியவை விரிவாகத் தரப்பட்டுள்ளன. பெருந்தலைவரின் வெளிநாட்டுப் பயணம், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பின்புலம், காங்கிரஸ் பிளவுக்குப் பின் காமராஜரின் மனநிலை ஆகியவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. காமராஜரின் இயல்புகள், குணநலன்கள், (உணவுமுறை, பழக்க வழக்கங்கள்) ஆகியவை "காமராஜராக" மற்றும் "காமராஜருக்காக" என்னும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. காமராஜரின் நினைவாக அரசு மற்றும் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள நினைவிடங்கள், காமராஜரின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் "நினைவாக" என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

காண்பதற்கு

காமராஜரின் வரலாறு, படத்துடன் விளக்க அட்டைகளாக காமராஜ் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காமராஜரின் குடும்பம், நண்பர்கள், அரசியல் வட்டாரங்களைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. காமராஜர் ஆட்சியின் சாதனைகள் புள்ளி விவரத்தோடு அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. காமராஜரைப் பற்றி இதுவரை வெளிவந்த புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் காமராஜரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இத்தகவல்கள் உதவும் என்று நம்புகிறோம். காட்சியகத்தின் மையப்பகுதியில் கல்தேரில் காமராஜர் அமர்ந்துள்ள நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. காட்சியகத்தின் மேல் மாடியில் பொது மக்கள், மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் "தாயம்மாள் நூலகம்" செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க ...

சேகரிப்பு

வெளியீடு

நாங்கள் "பெருந்தலைவர் பாதை" என்னும் வலைக்காட்சி (YouTube Channel) ஒன்றை நடத்தி வருகிறோம். பெருந்தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் வலைக்காட்சி (YouTube Channel) தொடரைப் பார்க்கலாம். காமராஜர் குறித்த கட்டுரைகளை எங்கள் இணையதளத்திலும், இதழ்களிலும் வெளியிட்டு வருகிறோம். "காமராஜர் பிறந்தாரா? அவதரித்தாரா!", "காமராஜ் புதிரா, புதையலா?", "காமராஜ் வரலாறு" ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளோம். இந்நூல்களின் ஆசிரியர் ளு.ஞ.கணேசன் எழுதிய "காமராஜ் வரலாறு" என்னும் நூல் 2016ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சிறந்த நூல்" மற்றும் "சிறந்த பதிப்பாசிரியர்" விருதுகளைப் பெற்றுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க ...

செயல்பாடு

காமராஜர் காட்சியகம் மற்றும் தாயம்மாள் நூலகம் ஆகியவை தினமும் காலை10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. பெருந்தலைவர் பாதை என்ற வலைக்காட்சி (YouTube Channel)ல் காமராஜர் குறித்த தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். காமராஜர் பிறந்த நாள், தலைவர்களின் பிறந்த நாள், சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா ஆகிய நாட்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

காமராஜ் பணியில் எங்களோடு இணைய உங்களையும் அழைக்கின்றோம். (பணஉதவி, களப்பணி செய்ய விரும்புவோர் எங்களை அணுகவும்)

மேலும் படிக்க ...

காமராஜ் காட்சியகம், விருதுநகர்

+91-94421-71000

kamarajviews@gmail.com