காமராஜர்

வாழ்க்கைச் சுவடுகள்

வருடம் நிகழ்வுகள்
1903 புதன் கிழமை காமாட்சி என்ற காமராஜ் பிறந்தார்.
1907 தங்கை நாகம்மாள் பிறந்தார்.
1908 பின் ஏனாதி நாயனார் வித்யாசாலாவில் படித்தார்.
ஏட்டுப்(திண்ணைப்) பள்ளியில் சேர்ந்தார்
1909 சத்திரிய வித்யாசாலாவில்(பிடியரிசிப் பள்ளியில்) சேர்க்கப்பட்டார்.
1910 தந்தை குமாரசாமி நாடார் மறைவு
1914 ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளி செல்வது நிறுத்தப்பட்டது.
ஞானம்பிள்ளை பெட்டிக்கடை அறிமுகம் ஏற்பட்டது.
1915 காங்கிரஸ் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
1919 சுதந்திரப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுப்பட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிப்படைந்தார்.
1920 கதராடை அணிய ஆரம்பித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.
1921 காந்திஜி,வேட்டியும் துண்டும்(சன்னியாசி உடை) முதன் முதலாக அணிந்து வந்து மதுரை மேடையில் தோன்றினார்.அன்று தான் முதன் முதலாக காமராஜ் காந்தியைப் பார்த்தார்.
எளிங்க நாயக்கன் பட்டியில் முதன் முதலில் மேடையில் பேசினார்.
விருதுபட்டிக் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார்.
பிரிட்டிஷ் இளவரசர் வருகைப் பகிஷ்கரிப்பில் கலந்து கொள்ளச் சென்னை சென்றார்.
1922 சாத்தூர் தாலுகாக் காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்தார்.
சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரானார்.
1923 நாகபுரி கொடிக் கிளர்ச்சிக்குத் திருச்சியில் இருந்து தொண்டர்களைத் திரட்டினார்.
விருதுபட்டியில் வாள் போராட்ட ஊர்வலம் நடத்தினார்.
கள்ளுக்கடை மறியலை மதுரையில் நடத்தினார்.
1927 சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டம் நடத்த,காந்திஜியிடம் சென்னை சென்று அனுமதி பெற்றார்.போராட்டம் நடத்தும் முன் சிலை அகற்றப்பட்டது.
1928 சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்தினார்.
1930 வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன் ஆந்திராவிலுள்ள அலிபுரம் பெல்லாரி(முதல் முறையாக) சிறையில் அடைக்கப்பட்டார்.
1931 ஜாமின் வழக்கில் கைதாகி ஒரு ஆண்டு சிறைத் தண்டனை(2வது முறை) பெற்று,திருச்சிச் சிறையிலும்,வேலூர்ச் சிறையிலும் இருந்தார்.
இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.
சென்னை மாகாணக் காங்கிரஸ் காரியக் கமிட்டிச் செயற்குழு உறுப்பினரானார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விடுதலை ஆனார்.
1932 சதி வழக்கு போடப்பட்டு(3வது முறையாக) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
1933 வைஸ்ராய்,சென்னை மாகாண வருகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காமராஜ்(5வது முறை) கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையம் மற்றும் விருதுநகர் அஞ்சலக வெடிகுண்டு வழக்கு போடப்பட்டு(4 வது முறை) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
1935 காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் கொண்டாடினார்.
1936 சென்னை மாகாணக் காங்கிரஸ் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937 விருதுநகர் நகராட்சி மன்ற தேர்தலில் 7வது வார்டு உறுப்பினராகத் (கவுன்சிலராக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டசபை விருதுநகர் உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி(ஏகமனதாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939 இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்து கொண்டது பற்றிய கருத்து வேறுபாட்டில் காந்திஜி(காங்கிரஸ்) விருப்பப்படி காமராஜ் உட்பட அனைத்து காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வந்தது.
1940 விருதுநகர் நகரசபைத் தலைவராகக் காமராஜ் சிறையில் இருக்கும் போது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாதுகாப்புச் சட்டத்தில்(6வது முறை) காமராஜ் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜ் தலைவராகவும் சத்தியமூர்த்தி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1942 ஆகஸ்ட் புரட்சியின் காரணமாகத் தேடப்பட்டவர்,தானே விருதுநகரில்(7வது முறை) கைதானார்.மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்
விருதுநகர் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்று,அன்றே ராஜினாமாச் செய்தார்.
1945 சென்னை மாகாண காங்கிரஸ் பார்லிமெண்ட்ரி போர்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் சாத்தூர்த் தொகுதியில் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948 சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக (தொடர்ந்து 3வது முறையாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1949 இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக 4ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கைச் சுற்றுப்பயணம்
1952 சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தல் மீண்டும் வந்தது.அதில் போட்டியின்றி காமராஜ்(5வது முறை) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டியில் (காமராஜர் ஆதரவாளர்) டாக்டர் சுப்புராயன் தலைவரானார்.
சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜர் போட்டியிடவில்லை.
முதல் பொதுத் தேர்தலில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக விருதுநகர் உள்ளடக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1953 இரண்டாவது முறையாக இலங்கைச் சுற்றுப்பயணம்
1954 குடுயாத்தம் தொகுதி,சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றார்.
கக்கன் காங்கிரஸ் தலைவரானார்.
சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதலமைச்சராக இருந்த இராஜாஜியின் ராஜினாமாவைத் தொடர்ந்து காமராஜ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலாய் நாட்டுச் சுற்றுப்பயணம்
1955 இராமநாதபுரம் ஜில்லா கடற்கரைப் புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று வெள்ள நிவாரணப் பணியை நேரிடையாக கவனித்தார்.
1956 சென்னை மாகாண சமதர்ம யாத்திரையில் வினோபாஜியுடன் காமராஜ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
60வது இந்திய காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் சென்னை ஆவடியில் காமராஜ் நடத்தினார்.
1957 மீண்டும் சென்னை மாகாண முதல்வராகப்(தொடரிந்து 2 வதுமுறை)பதவியேற்றார்.
இரண்டாவது பொதுத் தேர்தலில் தமிழக சட்டசபைக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1961 சென்னை மாநகராட்சியால் சென்னை மவுண்ட் ரோட்டில் காமராஜ் திரு உருவச் சிலை நிறுவப்பட்டு நேருஜியால் திறந்து வைக்கப்பட்டது.
1962 மீண்டும்(தொடர்ந்து 3வது முறை) தமிழகத்தின் முதல்வரானார்.
மூன்றாவது பொதுத் தேர்தலில் சட்டசபைக்கு,சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1963 இந்தியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தானே உருவாக்கிய ‘காமராஜ் திட்டம்’(K-plan) மூலமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமாச் செய்தார்.
1964 சாஸ்திரியைப் போட்டியின்றிப் பிரதமராக்கினார் காமராஜர்.
நேருஜி மறைந்தார்.
புவனேஸ்வரில் நடந்த இந்திய மகாசபைக் கூட்டத்தில் 62வது தலைவராகத் தமிழில் உரையாற்றினார்.
1965 சாஸ்திரி மரணமடைந்தார்
பாகிஸ்தான் போருக்கு வந்தது.போர் வீரர்களைப் பாகிஸ்தான் எல்லையில் நேரில் சென்று சந்தித்தார்.
1966 சோவியத்நாட்டிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கும்,அந்தந்த அரசு அழைப்பின் பேரில் 20 நாள் சுற்றுப்பயணமாக சென்றார்.
இந்தியக் காங்கிரஸ் தலைவராக மீண்டும்(2வது முறை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு பிரதமர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் (king-maker) எனப் பெயர் பெற்றார்.
இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார்.
1967 விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் தோல்வியடைந்தார்.
தமிழக சட்டசபை நான்காவது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
1968 இந்தியக் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜ் போட்டியிடவில்லை.
1969 காங்கிரஸ் பிளவு ஏற்பட்டு சிண்டிகேட்,இண்டிகேட் என பிரிந்தது.
தாயார் மரணம்
நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1971 இந்திய பாராளுமன்ற 5வது பொது தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பழைய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மீண்டும் (2வது முறை)வெற்றி பெற்றார்.
1972 தாமிரப்பத்திர விருதுபெற்றார்.
1975 காந்திஜி நினைவகம் அருகில் காமராஜ் உடல் எரியூட்டப்பட்டது.
காந்திஜி பிறந்த நாளில் காமராஜ், மதியம் மரணத்தைத் தழுவினார்.

காமராஜ் காட்சியகம், விருதுநகர்

+91-94421-71000

kamarajviews@gmail.com